கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 280 பேர் கைது
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 280 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதிய பணப்பயன் அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதியன்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் பந்தல் அமைத்து இரவு அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு 2 இரவுகள் தங்கி தங்களது பேராட்டத்தை தொடர்ந்தார்கள். நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்றும் சத்துணவு ஊழியர்கள் திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டதாக 200 பெண்கள் உள்பட 280 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.