பரமக்குடி சப்–கலெக்டரை கண்டித்து பணிகளை புறக்கணிக்க கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு

பரமக்குடி சப்–கலெக்டரை கண்டித்து பயிர் காப்பீடு, ஆன்லைன் சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை புறக்கணிக்கப்போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-29 22:32 GMT

பரமக்குடி,

பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உயர்மட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெகராயன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் பரமக்குடி சப்–கலெக்டரை கண்டித்து மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் வருகிற 1–ந்தேதி முதல் பயிர் காப்பீடு, ஆன்லைன் சான்றிதழ் உள்பட அனைத்து பணிகளையும் புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தென்மண்டல செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் கருப்பணன், மாவட்ட துணை செயலாளர் அசோக் குமார், அமைப்பு செயலாளர் கருப்பையா, கொள்கை பரப்பு செயலாளர் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி நேற்று முதல் வருகிற 31–ந்தேதி வரை கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்