மேயருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து பரிசீலனை முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு
மேயருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
நாக்பூர்,
மேயருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மேயர் கோரிக்கை
நாக்பூரில் நேற்று மாநகராட்சி மேயர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார்.
அப்போது மும்பை மாநகராட்சி மேயர் விஷ்வநாத் மகாதேஷ்வர் மேயர்களுக்கு நிதி மற்றும் நிர்வாக உரிமைகள் வழங்கவேண்டும், தற்போது இந்த அதிகாரங்கள் மாநகராட்சி கமிஷனரிடம் இருக்கிறது.
இந்த அதிகாரங்கள் பரவலாக்கப்படவேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “ மேயருக்கு நிதி மற்றும் நிர்வாகத்துறையில் அதிகரிப்பது குறித்து மராட்டிய அரசு பரிசீலிக்கும்.
அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது
தற்போது நிலுவையில் உள்ள மேயரின் அதிகாரங்கள் குறைந்ததாக இருக்கலாம். ஆனால் ஏற்கனவே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டு அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டும்.
மாநகராட்சியின் பல்வேறு மட்டங்களில் மேயர்களுக்கு தொகுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன” என்றார்.
மேலும் மும்பையில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 100 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும் ஒருவேளை அது உலகிலேயே மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமாக இருக்கலாம் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.