திருவண்ணாமலை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி - கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடந்தது.
இதில் 37 வார்டுக்கு உட்பட்ட ஏ.எல்.சி. குடியிருப்பு பகுதிகள் மற்றும் அஜீஸ் காலனி பகுதிகளில் நடந்த பணியை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் வீடுகளுக்கு ஆய்விற்கு செல்வதை உறுதி செய்யும் விதமாக 52 வாரங்கள் கையெழுத்து இடும் வகையில் உள்ள டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டி இருப்பதையும் ஆய்வு செய்தார்.
கொசுபுழுக்கள் எந்த வீட்டில் முழுமையாக காணப்பட வில்லையோ, மீண்டும் கொசுபுழுக்கள் அங்கு உருவாகாத சூழல் உள்ள வீட்டின் உரிமையாளர்களை பாராட்டும் விதமாக ‘கொசுபுழுக்கள் அற்ற இல்லம்’ நகராட்சியின் பாராட்டுகள் என்ற வாசகங்கள் பொறித்த ‘ஸ்மைலி’ பட ஸ்டிக்கர்கள் ஒட்டும் புதிய முயற்சி நகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆய்வின் போது சில வீடுகளை முழுமையாக ஆய்வு செய்து அதில் ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து வீட்டின் உரிமையாளர்களை கொண்டே ‘ஸ்மைலி’ ஸ்டிக்கர் கலெக்டர் முன்னிலையில் ஒட்டப்பட்டது. அந்த சமயம் அங்கு இருந்த சிறுவன் ‘சார் எங்க வீட்டிற்கும் வாருங்கள்’ என அழைப்பு விடுத்ததின் பேரில் மாடியில் உள்ள சிறுவனின் வீட்டிற்கு கலெக்டர் சென்றார். வீடு சுத்தமாக பராமரித்து வருவதை உறுதி செய்து ‘ஸ்மைலி’ ஸ்டிக்கரை அந்த சிறுவனை கொண்டே அவனது வீட்டில் ஒட்டச் செய்தார்.
மேலும் சிறுவனின் விருப்பப்படி அவனுடன் ‘செல்பி’ எடுத்து சந்தோஷப்படுத்தினார். இதனையடுத்து பைபாஸ் ரோடு மேற்கு குறுக்குத்தெருவில் உள்ள புதிய கட்டுமான கட்டிடத்தில் கொசு உற்பத்தி அதிக அளவில் இருப்பதை கண்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின் போது நகராட்சி ஆணையர் பாரிஜாதம், உதவி கலெக்டர் தங்கவேலு, நகர் நல அலுவலர் பிரதாப், துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் கண்ணா, கார்த்திகேயன், தாசில்தார் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.