இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரிதாபம்: சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி
புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி பலியானார்.
புதூர்,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கிராமசாவடி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி ராமுத்தாய் (44). இவர் மதுரை ஒத்தக்கடையை அடுத்த கொடிக்குளத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது சகோதரி மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கொடிக்குளம் விலக்கு பகுதியில் அவர்கள் சென்றபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ராமுத்தாயின் சேலை முந்தி சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து ராமுத்தாய் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.