பெண்ணுடன் பழகியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

ராயக்கோட்டை அருகே பெண்ணுடன் பழகியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-27 22:30 GMT
ராயக்கோட்டை,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கோடியூரை சேர்ந்தவர் கோவிந்தன், விவசாயி. இவருடைய மகன் மணிகண்டன்(வயது 18). இவர், ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர், மணிகண்டனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வாலிபர் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீவைத்து கொண்டார்.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியிலும், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்