கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வரத்து பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரிப்பு

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

Update: 2018-10-26 23:12 GMT
செங்குன்றம்,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 29-ந் தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

கடந்த மாதம் 29-ந் தேதி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 12.25 அடியாக பதிவாகி வெறும் 13 மில்லியன் கனஅடி தண்ணீீர் மட்டும் இருப்பு இருந்தது.

நீர்மட்டம் அதிகரிப்பு

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.67 அடியாக பதிவானது. 799 மில்லியன் கனஅடி தண்ணீீர் இருப்பு உள்ளது.

கடந்த மாதம் 29-ந் தேதி முதல் நேற்று காலை வரை பூண்டி ஏரியின் நீர் மட்டம் 12.42 அடி அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 524 கனஅடி வீதம் கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வீதம் இணைப்பு கால் வாயில் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 18 கனஅடி தண்ணீீர் பேபி கால்வாய் மூலமாக அனுப்பப்படுகிறது.

மேலும் செய்திகள்