தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று இரவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தேவேந்திரன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ராஜா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தெய்வானை, மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
சிறப்பு காலமுறை ஊதியம் என்ற அடிப்படையில் மிகக்குறைந்த ஊதியத்தை பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாக நியாயமான ஓய்வூதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக தமிழக அரசு தெரிவித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், பல்வேறு அரசு ஊழியர் சங்க கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.