அமராவதி ஆற்றுக்குள் சாயக்கழிவை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? விவசாயிகள் கேள்வி
கரூர் அமராவதி ஆற்றுக்குள் சாயக்கழிவை கொட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் தென்இந்திய நதிகள் இணைப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் குளத்துபாளையம் லிங்கம் சின்னசாமி பேசுகையில், அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. எனவே உற்பத்தி அதிகமாகிற காலத்தில் முருங்கைகாய்களை பாதுகாக்கும் விதமாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.
கரூரை சேர்ந்த சண்முகம் உள்ளிட்ட விவசாயிகள் பேசுகையில், கரூர் மாவட்டம் பெரியாண்டான்கோவில் முதல் பாலம்மாள்புரம் வரை செல்லும் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வாய்க்கால், தாந்தோன்றிமலை ராஜவாய்க்கால், கட்டளைமேட்டு வாய்க்கால் உள்ளிட்டவற்றை தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும். மேலும் திருமாநிலையூர் லைட் அவுஸ் கார்னர் அமராவதி ஆறு உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. இதன் மூலம் நீர் மாசுபடுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இந்த கூட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்ளிட்டோர் கருப்பு பட்டையை சட்டையில் அணிந்தபடி வந்து பேசினர்.
சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதி ராமலிங்கம் உள்ளிட்ட விவசாயிகள் பேசுகையில், கரூர் பிரம்மதீர்த்தம் படித்துறை அருகே அமராவதி ஆற்றுக்குள் சாயக்கழிவினை கொட்டியவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோ, அமராவதி வடிநில கோட்ட பொறியாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தோ இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும் எந்த சாயப்பட்டறையிலிருந்து அந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டன என்பதை ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அமராவதி ஆற்றில் தற்போது பாசனத்திற்கான நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் தான் சாயப்பட்டறைகளில் இருந்து சாயக் கழிவுகள் ஆற்றில் கலக்கிறதா? என்பதை அதிகாரிகள் திடீர் ஆய்வு மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாயக்கழிவு கலந்த நீரை விவசாயத்திற்கும், குளிப்பது- துணி துவைப்பது உள்ளிட்ட உபயோகதத்திற்கு நாம் பயன்படுத்துவதால் அதன் விளைவு அபாயகரமானதாக இருக்கும். மேலும் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இதேபோல் வாங்கல் வாய்க்கால் ஆரம்பிக்கும் வேலாயுதம்பாளையம் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும், விவசாய சாகுபடி பரப்பினை அதிகரிக்க செய்யும் பொருட்டு சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், புகளூர் வாய்க்காலில் காகித ஆலை கழிவுநீர் கலப்பதை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் எடுத்துரைத்தனர். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கந்தசாமி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.