மது பழக்கத்தை பெற்றோர் கண்டிப்பு: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குலசேகரன்பட்டினம் அருகே மது பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பந்தல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-10-26 21:30 GMT
குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் அருகே மது பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பந்தல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பந்தல் தொழிலாளி

குலசேகரன்பட்டினம் அருகே தாண்டவன்காடு நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ராமசேகர். இவருடைய மகன் முத்து செல்வம் (வயது 17). அதே பகுதியைச் சேர்ந்தவர் வரதன். இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முத்து செல்வம் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

பெற்றோர் கண்டிப்பு

முத்து செல்வம் அடிக்கடி மது குடித்து விட்டு, ஊதாரித்தனமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலையில் வரதனுக்கு சொந்தமான பந்தல் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த முத்து செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்