சம்பளம் வழங்கக்கோரி ரே‌ஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சம்பளம் வழங்கக்கோரி ரே‌ஷன் கடை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-25 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு கடந்த 15 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

விழாக்காலங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதும், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு மாதங்களுக்கான சம்பளத்தை வழங்கி வேலை வாங்குவதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வாகிவிட்டது. தற்போது ரே‌ஷன்கடை ஊழியர்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக கடைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சம்பளம் வழங்க அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று அவர்கள் புதுவை தலைமை செயலகம் அருகே கூடினார்கள். அங்கு தங்களது கோரிக்கையான சம்பளம் வழங்கவேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்