கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 79 பெண்கள் உள்பட 83 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 79 பெண்கள் உள்பட 83 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்,
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவூட்டும் செலவினம் ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரகங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்ல தயாராகினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலெக்டர் அலுவலகம் வெளியே வைத்து தான் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்று போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். இதனால் சத்துணவு ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே சாலையோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
இதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் வசந்தி, சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அமுதா போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா, மாவட்ட செயலாளர் கொளஞ்சி, பொருளாளர் வெங்கடாஜலம் ஆகியோர் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொடர் காத்திருப்பு போராட்டம் என்பதால் இரவு தங்கி இருக்க வேண்டும் என்பதற்காக சமையல் செய்வதற்கு பாத்திரங்கள், அடுப்பு, சமையல் கியாஸ் சிலிண்டர், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவை போராட்டக்களத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை 5 மணி யளவில் போலீசார் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சத்துணவு ஊழியர்களிடம் இரவு பாதுகாப்பு இருக்காது என்றும், எனவே போராட் டத்தை முடித்து கொண்டு கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிடாமல் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்தனர். இதையடுத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 79 பெண் சத்துணவு ஊழியர்கள் உள்பட 83 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி துறைமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யும் போது போராட்டக்காரர் களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.