4 வழிச்சாலை பணிக்காக குளங்களில் மணல் கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் தகவல்
4 வழிச்சாலை பணிக்காக குளங்களில் மணல் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி ரேவதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வேத அருள்சேகர், வேளாண்மை துறை இணை இயக்குனர் சுசீலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியபோது கூறியதாவது:-
பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் நகராட்சிக்கு குழாய் மூலமாக தண்ணீர் கொண்டு வருவதால் விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது. மணவாளக்குறிச்சி வள்ளியாற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதை அகற்ற வேண்டும்.
திற்பரப்பு வலதுகரை சானல் தண்ணீர் வீணாக செல்கிறது. ஆனால் இந்த தண்ணீரை கொல்லங்கோடு வரை கொண்டு செல்ல வசதிகள் உள்ளன. அவ்வாறு கொல்லங்கோடு வரை தண்ணீரை கொண்டு சென்றால் நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீரை நம்பி இருக்க வேண்டாம். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பணத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் இந்த கட்டிடங்கள் நாளடைவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. எனவே அரசு பணத்தை கட்டிடங்கள் கட்டி வீணடிக்காமல் குளங்களையும், கால்வாய்களையும் சீரமைக்க பயன்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் பல்வேறு உரக்கடைகளில் உரங்களின் விலைப்பட்டியல் வெளியிடப்படுவது இல்லை. குருந்தன்கோடு உள்பட பல்வேறு இடங்களில் தென்னை மரங்கள் நோயால் பாதிக்கப்படுகின்றன. எனவே தென்னை நோயை கட்டுப்படுத்த வேண்டும். பல மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல குமரி மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் நடக்கின்றன. குளங்கள் இருக்கும் வழியாக சாலை வரும் பட்சத்தில் குளத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்க குமரி மாவட்டத்தில் சாலைகள் அமைக்கும் பணிக்காக பெரும்பாலான குளங்களில் மணலை கொட்டி வைத்துள்ளதாக தெரிகிறது. இதை கண்காணிப்பதற்காக இரவு நேரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை பணியில் அமர்த்த வேண்டும்.
தேரூர் அருகே 4 வழிச்சாலை அமைப்பதற்காக கால்வாய்களில் மணல் கொட்டி வைத்திருப்பதால் விவசாயிகளின் பப்பாளி தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.
இதனால் அந்த பப்பாளி தோட்டம் பாழாகி வருகிறது. எனவே குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிக்காக குளங்களில் மணல் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாய பிரதிநிதிகள் கூறினர்.
மேலும் தண்ணீர் புகுந்ததால் அழுகி சேதமான பப்பாளி காய்களையும் ஒரு விவசாயி கூட்டத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியபோது கூறியதாவது:-
பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் நகராட்சிக்கு தண்ணீர் எடுப்பது தொடர்பாக கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. எனவே அதுபற்றி கூட்டத்தில் பேச முடியாது. மணவாளக்குறிச்சியில் பழுதான சாலைகள் சீரமைக்கப்படும். வள்ளியாற்றில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். திற்பரப்பு வலதுகரை சானல் தண்ணீரை பயன்படுத்துவது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும். குளங்கள், கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்னை மரங்கள் நோயால் பாதிக்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். எனினும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள். விலைப்பட்டியல் இல்லாத உரக்கடைகளை குறிப்பிட்டுச் சொன்னால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு திட்டம் குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். 4 வழிச்சாலை பணிகள் தொடர்பாக சட்டத்தை மீறி செயல்படுவதை அனுமதிக்க இயலாது. இதுதொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழை அளவு மற்றும் இந்த ஆண்டு இதுவரை பெய்துள்ள மழை அளவு விவரங்கள் மற்றும் நெல் சாகுபடி விவரங்கள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் கடந்த ஆண்டு 1388.32 மில்லி மீட்டர் அளவுக்கு குமரி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது.
அதுவே அக்டோபர் 22-ந் தேதி வரையில் கணக்கிடும்போது 890.44 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி வரையில் 1232.72 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.