டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெண்காட்டில் பொதுமக்கள் சாலை மறியல்
டாஸ்மாக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெண்காட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு,
திருவெண்காடு- நெய்தவாசல் சாலையில் உள்ள கூழைவாய்க்கால் கரைப்பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை நேற்று முன்தினம் தீடீரென திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னப்பெருந்தோட்டம். அம்பேத்கர் நகர் மற்றும் திருவெண்காடு தேரடி ஆகிய பகுதியில் வசித்துவரும் பெண்கள் நேற்று காலை திருவெண்காடு தேரடி பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள், முன்னாள் கவுன்சிலர் ராமநடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் வினோத், பம்புகுமார், ம.தி.மு.க. பிரமுகர் விக்ரமன், தி.மு.க. இளைஞரணியை சேர்ந்த ரவி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் திடீரென திருவெண்காடு- நெய்தவாசல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார், பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் டாஸ்மாக் கடையை மூடும்வரை கலைந்து செல்லமாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களிடம், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை உடனே மூடவேண்டும் எனகோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.