சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளையும் பார்வையிட்டார்
பில்லூர் நடுநிலைப்பள்ளியில் சத்துணவை சாப்பிட்டு கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார். பின்னர் வளர்ச்சி திட்டப்பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பருத்திபள்ளி, ராமாபுரம், கொளங்கொண்டை, மல்லசமுத்திரம் மேல்முகம், கருமனூர், பிள்ளாநத்தம், கூத்தாநத்தம், மங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் தொடக்கமாக பருத்திபள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு இருப்பதையும், ராமாபுரம் ஊராட்சியில்் ரூ.29 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.
தடுப்பணை
தொடர்ந்து கொளங்கொண்டை ஊராட்சி ஈச்சன்காடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டு வருவதையும், பிள்ளாநத்தம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள ரேஷன்கடை கட்டிட பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி மற்றும் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடன் இருந்தனர்.
பரமத்திவேலூர் பகுதியில்..
இதே போல பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார். வீரணம்பாளையம் ஊராட்சி காந்திநகர் பகுதியில் தமிழக முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடைகளுக்கான நீர் அருந்தும் தொட்டி, ரூ.4.12 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு நீரூற்றி பராமரிக்கப்பட்டு வரும் பணி ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். அருவம்காடு குட்டை பகுதியில் ரூ.77 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணி, அதே பகுதியில் ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்து வாய்க்காலில் குறிப்பிட்ட இடைவெளியில் நீர்பிடிப்பு குட்டைகள் அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக்கட்டிடம் ,ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். பில்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள சத்துணவு மையத்தில் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு மாணவ, மாணவிகளிடம் உணவு சுவையாக உள்ளதா? என கேட்டறிந்தார். ஆய்வின் போது பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன்,சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.