ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்,
ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி பசுபதீஸ்வரர், கரியமாலீஸ்வரர், நாகேஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 301 கிலோ அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு ஆறவைக்கப்பட்டது. பின்னர் இந்த அன்னத்தை அங்கிருந்த பசுபதீஸ்வரர் உள்ளிட்ட சிவலிங்கதிருமேனிகள் மீது சாற்றி பல்வேறு வகையான காய்கறிகள், பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் முழங்க பாராயணம் பாடப்பட்டது. சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து மகாதீப ஆராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி இறைவனை அன்னாபிஷேகத்தில் தரிசித்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னாபிஷேக அன்னத்தை உண்பதன் மூலம் நோய் நொடிகள் நம்மை அண்டாது. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் உணவு பஞ்சமே வராது என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இதில் கரூர், ஜவகர்பஜார், செங்குந்தபுரம், திருக்காம்புலியூர், திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அன்னதானம் சாப்பிட்டனர்.
இதே போல், பசுபதிபாளையம் ஐந்துரோடு அருகேயுள்ள பாலாம்பிகா உடனாய கோடீஸ்வரர் சாமி கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு சென்றனர். மேலும் சணபிரட்டி முச்சிலீஸ்வரர் கோவில், ஆண்டாங்கோவில் காசிவிசுவநாதர் கோவில், வாங்கல் பகுதியிலுள்ள ரத்தீஸ்வரர் கோவில், செட்டிபாளையம் குண்டலீஸ்வரர் கோவில், வெஞ்சமாம் கூடலூரிலுள்ள சிவன்கோவில், மூக்கணாங்குறிச்சி கிராமம் நத்தமேட்டிலுள்ள வீரபாண்டிஸ்வரர் கோவில், வெள்ளியணையிலுள்ள வெள்ளி அம்பலேஸ்வரர் கோவில், கிருஷ்ணராயபுரம் வட்டம் கட்டளையிலுள்ள கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.