கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-10-24 22:15 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு சம்பள கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊழியர் சங்க தலைவர் கோபால் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ராமர், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க உப தலைவர் சங்கர நாராயணன், பொதுச்செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

 அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த ஆணைகளை வெளியிடுவதில் தாமதம் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்