போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

Update: 2018-10-23 22:30 GMT
திருச்சி,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்கிட வேண்டும், பணி நிரந்தரம், பதவி உயர்வு வழங்கிட வேண்டும், கண்டக்டர் பதவியை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், வரவுக்கும்-செலவுக்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தி.மு.க. தொழிற்சங்க(எல்.எப்.எஸ்.) செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் கருணாநிதி, துணைத்தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சி.ஐ.டி.யூ.பணிமனை செயலாளர் அருள்தாஸ், துணைத்தலைவர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சம்மேளன குழு உறுப்பினர் ஜெயராமன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்