சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வரவேற்பு

பட்டாசு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி உள்ளதாக விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

Update: 2018-10-23 22:45 GMT

சிவகாசி,

இந்தியா முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், விநியோகம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாகல் செய்தனர். இந்த வழக்கில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை தெடர்ந்து சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகாலட்சுமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் சி.ஐ.டி.யூ. சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இந்த தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த பட்டாசுக்கு எதிரான வழக்கில் சிறப்பு மிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். பல லட்சம் தொழிலாளர்களை இந்த தீர்ப்பு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இனி இந்த தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றே நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்