ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே சுபாஷ் நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அங்கு புதிதாக ஒரு டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அதை அறிந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று பகல் 12 மணியளவில் அப்பகுதி ஆண்களும்–பெண்களுமாக ஏராளமானோர் அங்கு திரண்டு கடை முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் ஊழியர்கள் மதுவை விற்பனை செய்ய முடியாமலும், கடையை விட்டு வெளியே வரமுடியாமலும் தவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பொதுமக்கள், குடியிருப்புகள், கிறிஸ்தவ ஆலயம் ஆகியவை உள்ள பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம். எனவே நிரந்தரமாக கடையை அகற்றும் வரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். அதை தொடர்ந்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தனி தாசில்தார் (ஆயத்தீர்வை) கோலப்பன் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பொதுமக்கள் கடையை அகற்றுவதில் உறுதியாக இருந்தனர். அதனால் அவர், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.