சாலையோரம் நின்ற லாரி மீது தனியார் பஸ் மோதி 8 பயணிகள் பலி 13 பேர் படுகாயம்
அகமதுநகர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 8 பயணிகள் பலியானார்கள். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
புனே,
அவுரங்காபாத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் பஸ் ஒன்று புனே நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
அதிகாலை 5.20 மணியளவில் அகமதுநகர் அருகே புனே- அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் வாடேகாவ்கன் என்ற இடத்தில் பஸ் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவர் மற்றும் பயணிகள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி கிடந்த பயணிகளை மீட்டனர்.
உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 8 பயணிகள் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2 பேரின் உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டன. அவர்கள் அவுரங்காபாத்தை சேர்ந்த அம்ஜாத் சேக் (வயது35), பிரமோத் உத்தமன் மோரே (30) என்பது தெரியவந்தது.
படுகாயம் அடைந்த 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் தூங்கியதாலேயே இந்த விபத்து நேரிட்டதாக உயிர் தப்பிய பயணி ஆகாஷ் என்பவர் கூறினார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.