சபரிமலை அய்யப்பன் கோவில் புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
சபரிமலை அய்யப்பன் கோவில் புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
பெண்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் ஆண்களுக்கு எதிராக பெண்கள் இரும்பு பெண்மணியாக மாற வேண்டும். சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் புனிதமானது. அந்த புனிதத்தை கெடுக்கும் வகையில் பலர் செயல்படுகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் புனிதத்தை யாராலும் கெடுக்க முடியாது. கேரள மாநிலத்தில் போராடும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதரவாக நாளை (அதாவது இன்று) சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.