சென்னை விமான நிலையத்தில் ரூ.19½ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கேரள வாலிபரிடம் இருந்து ரூ.19½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-22 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திற்கு துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். 

அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த கேரளா வாலிபர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தங்கம் பறிமுதல்

அவரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் தங்க கட்டிகள் மறைத்துவைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரிடம் இருந்த 600 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக கேரள வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்