மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம்
மாடல் அழகி கொலையில் கைதான கல்லூரி மாணவர் முரண்பட்ட வாக்குமூலம் அளித்து வருகிறார். அவரிடம் உண்மையை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை,
மும்பையில் மான்ஷி தீக்சித் என்ற 20 வயது மாடல் அழகி அண்மையில் கொலை செய்யப்பட்டார். மலாடு பகுதியில் ஒரு சூட்கேசில் முகம் உள்பட உடல் முழுவதும் காயங்களுடன் படுக்கை விரிப்பால் சுருட்டப்பட்ட நிலையில் மான்ஷியின் உடல் கைப்பற்றப்பட்டது.
போலீஸ் விசாரணையில், மாடல் அழகியை கல்லூரி மாணவர் முசாமில் சையத் (19) என்பவர் கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், அவரை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அவர் மான்ஷி தீக்சித் முதலில் செக்ஸ் உறவுக்கு மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அது கொலைக்கான காரணம் இல்லை என தனது வாக்குமூலத்தை முசாமில் சையத் மறுத்து இருக்கிறார்.
கொலை தொடர்பாக அவர் மாற்றி, மாற்றி முரண்பட்ட வாக்குமூலத்தை தெரிவித்து வருகிறார். இதனால் போலீசார் குழப்பம் அடைந்து உள்ளனர்.
மாடல் அழகி மான்ஷி தீக்சித் கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.