ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் நல்லக்கண்ணு பேட்டி
ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார்.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள திருத்துறைப்பூண்டி வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டத்துக்கு முறையாக தண்ணீர் திறந்து விடாததாலும், வாய்க்கால்கள், ஆறுகளை முறையாக தூர்வாராததாலும் விவசாயம் முற்றிலுமாக பாதித்து விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் சேல் கியாஸ் எடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக அந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். அதே போல் கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் மாநில அரசு கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் உள்ளாட்சி பணிகள் முற்றிலுமாக பாதித்துள்ளது. ஆகையால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு உடனடியாக முன் வர வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் முதல்-அமைச்சர் பழனிசாமி தார்மீக அடிப்படையில் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.