முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்ய முயன்ற ரவுடி கைது
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் வி.மருதூர் மேல்வன்னியர் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வினோத்குமார் (வயது 26). இவருடைய தம்பி கார்த்திகேயனுக்கும் (24), வி.மருதூர் பெருமாள் நகரை சேர்ந்த ரவுடியான வெங்கடேசன் என்கிற பவுல்வெங்கடேசனின் (31) தம்பியான பிரபாகரனுக்கும் (25) ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் வினோத்குமார் தனது மாமா ராஜாவுடன் அதே பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேசன், ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வினோத்குமாரிடம் பிரச்சினை செய்து அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் வெங்கடேசன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்குமாரை குத்த முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட வினோத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.