மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் சாவு
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் மரணமடைந்தார்.
கும்மிடிப்பூண்டி,
சென்னை அம்பத்தூரை அடுத்த வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 42). இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
புதுவாயல் பகுதியில் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜி, சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாலாஜி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.