ஆயுதபூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் - பூ விலை அதிகரிப்பு
வேலூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு நேற்று பூஜைபொருட்கள் வாங்க சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூ வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்திருந்தது.
வேலூர்,
ஆயுதபூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜையை முன்னிட்டு வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். ஆட்டோக்கள், கார்கள் என போக்குவரத்து வாகனங்களுக்கும் பூஜைசெய்வது வழக்கம்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து பூஜைசெய்து வழிபடுவார்கள். மேலும் வீட்டு வாசலில் வாழை மரங்கள் கட்டி, பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்யப்படும். இதற்காக பொரி, பழங்கள் மற்றும் பூ விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.
இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று காலையிலேயே வேலூர் லாங்குபஜாரில் வாழைமரங்கள், பொரி, பழவகைகள், பூசணிக்காய்கள், பூக்கள் ஆகியவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். இதனால் லாங்குபஜாரில் கூட்டம் அலைமோதியது.
ஆயுதபூஜையை முன்னிட்டு பூ மற்றும் பழங்களின் விலை வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது. மொத்த விற்பனை கடைகளில் சாதாரண நாட்களில் ஒருகிலோ 80 ரூபாய்க்கு விற்ற சாமந்தி பூ நேற்று 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 200 ரூபாய்க்கு விற்ற மல்லி 330 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற முல்லை ரூ.330-க்கும், 180 ரூபாய்க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.200-க்கும், 80 ரூபாய்க்கு விற்ற ரோஜா ரூ.120-க்கும் விற்பனையானது.
இந்த விலை இன்று (வியாழக்கிழமை) மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று வாழை கன்றுகள் ஒரு ஜோடி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பூசணிக்காய் ஒன்று ரூ.50 முதல் ரூ.120 வரையிலும், 6½ கிலோ எடைகொண்ட பொரி மூட்டை ரூ.400 வரையிலும் விற்பனையானது. அவல், கடலை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று பழங்களின் விலையும் அதிகரித்திருந்தது. இவற்றின் விலையும் இன்று அதிகரிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.