மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் சொத்து வரியை உயர்த்தி அறிவிப்பு செய்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-17 22:30 GMT
சிவகாசி,

சிவகாசி நகராட்சிக்கு பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் சொத்துவரியை உயர்த்தி வசூலிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் சொத்துவரி உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகாசி நகர் குழு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்துக்கு பழனி தலைமை தாங்கினார். மாடசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இதில் நகர செயலாளர் முருகன், லாசர், முத்துராமன், அன்னலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்