ஹெச்.டி.சி. டிஜிட்டல் கேமரா
ஹெச்.டி.சி. நிறுவனத் தயாரிப்பான இந்த கேமரா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
புகைப்படம் எடுக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமானது. மிகவும் எளிதாக கையாளக் கூடியது. உள்ளங்கையில் வைத்தபடியே இதில் புகைப்படம் எடுக்க முடியும். 16 மெகா பிக்செல் லென்ஸ் இருப்பதால் படங்கள் துல்லியமாக இருக்கும்.
இது நீர் புகா தன்மை கொண்டது என்பதால் நீருக்கடியில் செல்பி புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கும் இது உதவும். அதேபோல கேன்டிட் செல்பி எடுக்கவும், மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் வைத்தபடி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லவும் இது உதவும். தொடு முறையில் புகைப்படத்தை சாத்தியமாக்கும் எளிய சாதனம் இது. புகைப்படம் எடுப்பதற்கு வியூ பைண்டரில் பார்த்து கை அசையாமல் படம் எடுப்பது எல்லாம் பழைய பழக்கம். அவை அனைத்தும் தேவையில்லை என்று நிரூபிக்கும் வகையில் இதன் செயல்பாடு அமைந்துள்ளது.
இதில் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உடனுக்குடன் மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு ஹெச்.டி.சி. ஆப் (செயலி) மிகவும் உதவிகரமாக உள்ளது. 30 எப்.பி.எஸ். வேகத்தில் 1080 படங்களை இதில் பதிவு செய்ய முடியும். மேலும் இதில் ஸ்லோமோஷன் படங்களும் எடுக்க முடியும். இது 146 டிகிரி சுழலக்கூடிய லென்ஸ் கொண்டது. இதனால் இந்த கேமரா கண்ணில் இருந்து எதுவும் தப்பாது. இது வை-பை மற்றும் புளூடூத் இணைப்பில் செயல்படக் கூடியது. இதனால் படங்களை உடனுக்குடன் மற்றவர்களுக்கு பகிர முடியும்.
ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்கு தொழில் பழக இது மிகவும் ஏற்றது. இது பெரிஸ்கோப் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொது வாக நீர்மூழ்கி கப்பலில்தான், நீரின் மேல்பகுதியை அறிந்து கொள்ள பெரிஸ்கோப் பயன்படுத்தப்படும். அதைப் போன்ற தோற்றத்தில் இது உள்ளது. இதில் சோனி சென்சார் உள்ளது. இதனால் நீங்கள் எதிர்பார்த்ததை விட படங்கள் துல்லியமாகக் கிடைக்கும். இதன் வைட் ஆங்கிள் நுட்பம் தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் பின்பற்றுவதாகும். இது பல வண்ணங்களில் வந்துள்ளது. வெள்ளை நிறத்திலான கேமரா விலை ரூ. 7,443. வண்ணங்களிலான கேமரா விலை ரூ. 8,185 ஆகும்.