மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் - ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார்
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார்.
வேலூர்,
வேலூரில் மார்பக புற்றுநோய் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார்.
உலக மார்பக புற்றுநோய் ஒழிப்புதினம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் நேற்று வேலூரில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. வேலூர் கோட்டை முன்புள்ள காந்திசிலை அருகில் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. இதில் மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி டீன் சாந்திமலர் தலைமை தாங்கினார். மாரத்தான் ஓட்டத்தை ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் காந்திசிலை அருகில் இருந்து கோட்டையை 3 முறை சுற்றி ஓடினர். மாணவிகள் 2 முறை கோட்டையை சுற்றி ஓடினர்.
அவர்களுடன் ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் டாக்டர்களும் கலந்துகொண்டு ஓடினர். மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடிய மாணவ- மாணவிகளுக்கு நேதாஜி மைதானத்தில் நடந்த விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ்களை சைலேந்திரபாபு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். தினமும் ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். மாணவ- மாணவிகள் தினமும் உடற்பயிற்சி செய்தால் கல்வி கற்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றார். நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் திருமால்பாபு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், துணை முதல்வர் ஆதிகேசவன், துறைத்தலைவர்கள் பாலாஜி, கவுரி, ராஜவேலு, குமரன், கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.