இளநிலை உதவியாளர்கள் நியமிக்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இளநிலை உதவி யாளர்கள் நியமிக்க கோரி கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,
கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு.வுடன் இணைந்த டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பத்மஸ்ரீகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களின் பொதுப்பணியிட மாறுதல் மற்றும் இளநிலை உதவியாளர்கள் நியமிக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு பெட்டிகேஷ் தொகையை ரூ.500 உயர்த்தி வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போது கடையிலுள்ள சரக்குகளை கிடங்கிற்கு கொண்டு சென்றதால் ஏற்பட்ட வாகன செலவு தொகையை உடனே வழங்கிட வேண்டும்.
மேலும் கடைகளில் 90 நாட்களான சரக்குகளை கிடங்கிற்கு அனுப்பி வைக்க பயன்படுத்தப்படும் வாகன செலவுத்தொகையை நிர்வாகம் அளித்திட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2017-18-ம் ஆண்டுக்கான போனஸ் 20 சதவீதம் மற்றும் கருணைதொகை 20 சதவீதம் என 40 சதவீத தொகை சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.