மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
சி.ஐ.டி.யூ., தி.மு.க.தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் இந்து மஸ்தூர் சபை போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. தொழிற்சங்கத்தன் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி தொடங்கி வைத்தார். தொழிற்சங்கங்களை சேர்ந்த கோனேரிபாளையம் குமார், அகஸ்டின் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஒப்பந்த முறையையும், அவுட்சோர்சிங் முறையிலான பணிகளை தடைசெய்ய வேண்டும். நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முறையை (டேர்ம்) கைவிட வேண்டும். தமிழகத்தில் முத்தரப்பு குழுக்களை உடனே அமைத்து கூட்ட வேண்டும். தொழிற்சாலை ஆய்வுத்துறையை செயல்படுத்த வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை சேர்த்து வைத்து பிடித்தம் செய்த தொகைகளை கையாடல் செய்வதை கைவிட வேண்டும்.
மின்வாரியத்தில் மின்சார வினியோகம் வழங்கியதிலும், பெற்றதிலும் ஊழல் நடைபெற்றுள்ளதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்து அரசே விலையை நிர்ணயம் செய்யவேண்டும். மோட்டார் வாகன காப்பீட்டுக்கான கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திருத்தி அமைத்துள்ளதை கைவிடவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் ஆட்டோ சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம் நன்றி கூறினார்.