குமரியில் பன்றி காய்ச்சல்: ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-10-16 22:30 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், குமரி மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். டாக்டர்களிடமும் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டார்.

இதுதொடர்பாக சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார் வந்ததால் இங்கு ஆய்வு செய்ய வந்தேன். ஆனால், டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ந்து நல்லமுறையில் சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும். நகரில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. அதை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் நகர செயலாளர் மகேஷ், சவுந்தர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்