அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் விழுந்து 2 வயது குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-10-16 22:45 GMT

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், டாக்டர் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் முரளி. வெல்டர். இவரின் குழந்தை ஜீவா (வயது 2).

வீட்டின் அருகே நேற்று முன்தினம் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஜீவா திடீரென காணமல் போனது. எங்கு தேடியும் கிடைக்காததால் குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்து அரும்பாக்கம் போலீசில் முரளி புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முரளி வீட்டின் பின்பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் அருகே சென்று சந்தேகத்தின் பேரில் போலீசார் பார்வையிட்டனர். அப்போது கூவம் ஆற்றின் ஓரம் உள்ள மரத்தின் அருகே குழந்தை ஜீவா உடல் மிதந்து கொண்டு இருப்பதை கண்டனர்.

இதையடுத்து ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தை ஜீவா விளையாடும் போது தவறி கூவத்தில் விழுந்து மூழ்கி இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்