கந்திகுப்பம் அருகே: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
கந்திகுப்பம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பர்கூர்,
பீகார் மாநிலம் தேகுசாரய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜித்குமார். இவரது மகன் ரவிக்குமார் (வயது 4). சுஜித்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள சுண்டம்பட்டியில் தங்கி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் சிறுவன் ரவிக்குமார் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த மின்சார வயரை தொட்டான். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பலியானான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கந்திகுப்பம் போலீசார் சென்று சிறுவன் ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.