பாளையங்கோட்டையில் கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
பாளையங்கோட்டையில் கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணை செயலாளர் அப்ரீன் பீர்முகமது, கணபதி சுந்தரம், வக்கீல் ஜெனி, ஜோதி பரமசிவன், தொழிற்சங்க நிர்வாகிகள் வேல்பாண்டி, பகவதி முருகன், திருத்து சின்னத்துரை, கிளாசிக் பாரத், வெண்ணிலா ஜீவபாரதி, பாப்பா ரத்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்–த.மா.கா.
காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு, நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மூத்த வக்கீல் மகேந்திரன், மாநகர மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், ஷபீக், மண்டல தலைவர்கள் மாரியப்பன், தனசிங் பாண்டியன், பாலாஜி, ஊடக பிரிவு தருவை காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வர்த்தக அணி சக்சஸ் புன்னகை, சிறுபான்மை பிரிவு ரமேஷ் செல்வன், டி.பி.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாயுடு சங்கம்
நெல்லை மாவட்ட நாயுடு நலச்சங்கம் மற்றும் பாளையங்கோட்டை நாயுடு சமுதாய சங்கம் சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பாளையங்கோட்டை தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் வெங்கட்ராஜ், செயல் தலைவர் அந்தோணி, துணைத்தலைவர்கள் மூர்த்தி, கணேசன், கிருஷ்ணன், பரமசிவன், சக்திவேல், அங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு தரப்பினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கட்டபொம்மன் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு கட்டபொம்மன் படத்துக்கு காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் கலந்துகொண்ட மாணவ–மாணவிகளுக்கு கட்டபொம்மனின் வரலாறு, தியாகங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படங்களையும், அவரது போர்க்கருவிகளையும் மாணவ–மாணவிகள் பார்வையிட்டனர்.