விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். அவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த விசைப்படகு மீனவர்கள் அரசு வழங்கும் மானிய விலை டீசலை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு வழங்கும் மானிய விலை டீசல் போதுமானதாக இல்லை என்பதால் மீனவர்கள் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கி கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்வதால், அதிக விலை கொடுத்து டீசல் வாங்கி கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது. அதிக விலைக்கு வாங்கி கடலுக்கு மீன்பிடிக்க சென்றாலும், போதுமான அளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இதனால் மீனவர்கள் நஷ்டம் அடைகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க வேண்டும், மானிய விலையில் வழங்கப்படும் டீசலை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் விசைப்படகுகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நேற்று விசைப்படகு மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.