காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரத்தூர்-ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து அந்த பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க உள்ளதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தெரிவித்தார்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று ஆய்வு செய்தார்.
தாம்பரம் தர்காஸ் சாலை, முடிச்சூர் சாலை பகுதிகளில் பாப்பன் கால்வாய், அடையாறு ஆற்றில் நடைபெறும் பாலப்பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.
அதன் பின்னர் நிருபர்களிடம் சத்யகோபால் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. குறிப்பாக காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.84 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரூ.16 கோடியும் நிதி ஒதுக்கி உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்தோம்.
ஒரத்தூர் ஏரி மற்றும் ஆரம்பாக்கம் ஏரி பகுதியில் புறம்போக்கு நிலங்கள் உள்ளதால் இந்த 2 ஏரிகளையும் இணைத்து அந்த பகுதியில் புதிய நீர்த்தேக்கமாக மாற்ற உள்ளோம். இதன் மூலம் அந்த பகுதியில் 0.3 டி.எம்.சி.யில் இருந்து 0.5 டி.எம்.சி. தண்ணீர் வரை தேக்க முடியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள மொத்த புறம்போக்கு நிலங்களையும் கணக்கெடுக்கும்படியும், தண்ணீர் தேக்கும் பகுதிக்கு அவற்றை இணைக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்யவும் பொதுப்பணித்துறையினரிடம் கூறி உள்ளோம். ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஏரிகள் இணைக்கும் பணிகளுக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம். அதற்கு மேல் கூடுதலாக நிதி தேவைப்பட்டாலும் அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் ஆதனூர் பகுதியில் 15 குடியிருப்பு பகுதிகளில் 5 அடி தண்ணீர் தேங்கியது. இதனால் கூடுவாஞ்சேரியில் இருந்து ஆதனூர் ஏரிக்கு போகும் தண்ணீரை ஆதனூர் ஏரி நிரம்பும்போது அடையாறு ஆற்றுக்கு திருப்பும் வகையில் வெள்ள வடிநீர் கதவணை அமைக்கப்பட்டுள்ளது.
தர்காஸ் சாலை பகுதியில் அடையாறு ஆற்று பாலத்தில் 2 வழிகளில் சென்ற தண்ணீரை, தற்போது பாலத்தை அகலப்படுத்தி 9 கண் வழியாக செல்லும் வகையில் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து இடங்களிலும் இதேபோல் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் பாப்பன் கால்வாயில் இருந்தும் வெள்ளநீர் அடையாறு ஆற்றுக்கு விரைவாக செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டதோ அந்த பகுதிகளில் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் வெள்ள பாதிப்பு சில இடங்களில் முற்றிலும் இருக்காது. சில இடங்களில் வெகுவாக குறையும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2 இடங்களில் மழைநீரை தேக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி உள்ளோம். ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைக்கும்போது அது பெரிய நீர்த்தேக்கமாக மாறும். இதேபோல எந்தெந்த இடங்களில் நீர்த்தேக்கம் அமைக்க வாய்ப்புகள் உள்ளதோ அந்த இடங்களில் படிப்படியாக நீர்தேக்கம் மற்றும் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. நவம்பர் முதல் வாரத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். வெள்ளநீரை வெளியேற்றும் வகையில் அனைத்து கால்வாய் பணிகளையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்வாய் மீது கான்கிரீட் அமைக்கும் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முடிச்சூர் சாலை பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 5 இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் அடையாறு ஆற்றுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் முடிச்சூர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையும். இந்த மழையில் குறைந்த அளவு பாதிப்பு இருந்தாலும் அதற்கான காரணம் என்ன? என்பதையும் ஆராய்ந்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்.