மேலூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

மேலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மேலூர்–திருப்புவனம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-10-14 22:30 GMT

மேலூர்,

மேலூர் அருகே உள்ள பூஞ்சுத்தி காலனியில் கடந்த 10 தினங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேலூர்–திருப்புவனம் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் வந்திருந்தனர். அவர்கள், தொடர்ந்து குடிநீர் வராததால் பெரிதும் சிரமப்படுவதாகவும், மேலும் காலனியில் உள்ள அடி பம்புகள், தண்ணீர் தொட்டி ஆகியவை நீண்ட நாட்களாக பழுதான நிலையில் இருப்பதாகவும், இதுபற்றி மேலூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென்று கோ‌ஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 தகவலறிந்து வந்த மேலூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்