சென்டிரல் ரெயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
தன்பாத்-ஆலப்புழா இடையே இயக்கப்படும் போகாரோ எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 13351) நேற்று அதிகாலை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது போகாரோ எக்ஸ்பிரஸ் ரெயிலின் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பெட்டிக்கு முன்பாக 4 பைகள் கிடந்தன. இதை அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.) பார்த்தனர்.
அந்த பைகளை சோதனையிட்டபோது அதில் 20 பொட்டலங்களில் 40 கிலோ அளவிலான கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கஞ்சா பொட்டலங்கள் சென்டிரல் ஆர்.பி.எப். நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 40 கிலோ கஞ்சா உடனடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கஞ்சா பொட்டலங்கள் போகாரோ எக்ஸ்பிரசில் இருந்து கொண்டுவரப்பட்டனவா? அந்த ரெயிலில் அனுப்புவதற்காக சென்டிரல் கொண்டுவரப்பட்டதா? யார் இதில் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.