பதஞ்சலி நிறுவன வினியோக உரிமை தருவதாக கல்லூரி மாணவரிடம் ரூ.4 லட்சம் மோசடி கும்பலுக்கு வலைவீச்சு

பதஞ்சலி நிறுவன வினியோக உரிமை தருவதாக, கல்லூரி மாணவரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-10-13 23:45 GMT
அம்பர்நாத், 

பதஞ்சலி நிறுவன வினியோக உரிமை தருவதாக, கல்லூரி மாணவரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வினியோக உரிமை

தானே மாவட்டம் கல்யாண், பஜார்பேத் பகுதியில் 22 வயது பொறியியல் கல்லூரி மாணவர் ஆயுர்வேத பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவர் பதஞ்சலி நிறுவனத்தின் வினியோக உரிமையை பெற விரும்பினார். எனவே இவர் ஆன்லைன் மூலம் பதஞ்சலி நிறுவனத்தின் இணையதள பக்கத்திற்கு சென்று வினியோக உரிமை கேட்டு விண்ணப்பித்தாா்.

இதையடுத்து ஒருவர் மாணவரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் ரூ.4 லட்சம் கொடுத்தால் பதஞ்சலி நிறுவனத்தின் வினியோக உரிமை மற்றும் பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறினார். இதை நம்பிய மாணவர் அவர் கூறிய வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்.

மோசடி

ஆனால் பதஞ்சலி நிறுவன பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் மர்ம கும்பல் பதஞ்சலி நிறுவனத்தின் பெயரில் போலி இணையதள பக்கத்தை தொடங்கி மாணவரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்