ரூ.8½ கோடி செலவில் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதுப்பிக்கப்படுகிறது
ரூ.8½ கோடி செலவில் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதுப்பிக்கப்பட உள்ளது.
மும்பை,
ரூ.8½ கோடி செலவில் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதுப்பிக்கப்பட உள்ளது.
போலீஸ் கமிஷனர் அலுவலகம்
மும்பை கிராபர்டு மார்க்கெட் பகுதியில் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் நூற்றாண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால கட்டிடம் ஆகும். பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறாததால் கட்டிட சுவர்களில் செடி முளைத்து கமிஷனர் அலுவலகம் பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
இதேபோல கமிஷனர் அலுவலகத்தில் சில இடங்களில் மழைநீர் கசிவு பிரச்சினை மற்றும் ஜன்னல், கதவுகள் உடைந்தும் காணப்படுகின்றன. இந்தநிலையில் பாழடைந்த கமிஷனர் அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும் என மும்பை போலீஸ் சார்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
ரூ.8½ கோடி ஒதுக்கீடு
இதையடுத்து, மாநில அரசு அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதுப்பிக்கப்படும் என்றும், அதற்காக ரூ.8½ கோடியை மாநில அரசு ஒதுக்கி உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சஞ்சய் இந்துர்கர் கூறியதாவது:- மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டோம். அப்போது அங்கு மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியது தெரியவந்தது. முதல் கட்டமாக மழைநீர் கசிவை தடுக்க பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.