உலக வீடற்றோர் தினம்: சென்னையில், 12 இடங்களில் இன்று விழிப்புணர்வு முகாம் மாநகராட்சி ஏற்பாடு

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு முகாம்கள் இன்று நடக்கிறது.

Update: 2018-10-09 23:00 GMT
சென்னை,

உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் சாலையோரம் வசிக்கும் தனிநபர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடற்றோர் இலவசமாக மாநகராட்சி காப்பகங்களில் தங்குவதற்காகவும், அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு முகாம்கள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

அதன்படி கோயம்பேடு, வள்ளலார் நகர், பாரிமுனை, தியாகராயநகர், வடபழனி, சைதாப்பேட்டை, திருவான்மியூர், அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையங்கள், சென்டிரல் ரெயில் நிலையம், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எழும்பூர் ரெயில் நிலையம் ஆகிய 12 இடங்களில் நடைபெறுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 47 காப்பகங்கள் இயங்கி வருகிறது. எனவே சாலையோரங்களில் வசிக்கும் தனிநபர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பிற வீடற்றோர் வசிப்பதை அறிந்த பொதுமக்கள் ‘1913’, 94451 90472, 044-25303849 ஆகிய மாநகராட்சி தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

காப்பக பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையோரம் வசிப்பவர்களை மீட்டு தகுந்த ஆலோசனை வழங்கி, காப்பகத்தில் தங்க வைப்பார்கள்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்