அண்டாப்ஹில் குடிசை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 2 பேர் கைது
அண்டாப்ஹில் குடிசை பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாத தடுப்பு படையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பை அண்டாப்ஹில் குடிசை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் ேபரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு குண்டு வெடித்ததில் குடிசை வீடுகள் எரிந்து கொண்டிருந்தன. இதையடுத்து தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடிசை வீடுகளில் எரிந்த தீயை அணைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், அஸ்ருல் சேக் (வயது22) மற்றும் 17 வயது வாலிபர்ஆகிய 2 பேர் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து அவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்தனர் எனவும், நாசவேலைகளில் ஈடுபட சதி வேலைகளில் முயன்றனரா என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.