கட்சியை பிளவுபடுத்த டி.டி.வி தினகரன் முயற்சியா? அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில்

திண்டுக்கல்லில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

Update: 2018-10-06 23:15 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவரிடம், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக கூறி, கட்சியை பிளவுபடுத்த டி.டி.வி.தினகரன் முயற்சி செய்கிறாரா? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையேயான பிரச்சினை உங்களுக்கு இப்போது தான் தெரிந்திருக்கிறது. ஆனால் இது தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சினை குறித்து துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முழுமையாக விளக்கம் அளித்துவிட்டார்’ என்றார்.

மேலும் செய்திகள்