கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி அ.தி.மு.க.வினர் கோஷ்டி மோதல் நாகர்கோவிலில் பரபரப்பு
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி அ.தி.மு.க.வினர் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதனால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பால்வள கூட்டுறவு இணையம், மீன்வள கூட்டுறவு இணையம் உள்ளிட்டவற்றுக்கு உறுப்பினர் பதவிகளுக்கான மனு தாக்கல் நேற்று நடந்தது. இதில் பால்வள கூட்டுறவு இணையத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் மனுதாக்கல் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட எஸ்.ஏ.அசோகன் மற்றும் தொண்டர்கள் அரசு விருந்தினர் மாளிகை அருகே வந்தனர்.
அரசு விருந்தினர் மாளிகையில் ஏற்கனவே விஜயகுமார் எம்.பி. ஆதரவாளர்கள் முன்னாள் மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம் தலைமையில் நின்றனர். அப்போது இருதரப்பினர் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு தரப்பினர் விஜயகுமார் எம்.பி.க்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் தளவாய்சுந்தரம் மற்றும் எஸ்.ஏ.அசோகனுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதற்குள் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஒரு தரப்பினர் கம்பு, கற்களை கொண்டு மற்றொரு தரப்பினரை தாக்க தொடங்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
அதற்குள் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் கலைந்து போக செய்தனர். எனினும் அங்கு பரபரப்பு அடங்கவில்லை. இருதரப்பினரும் மாறி, மாறி கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் கோஷ்டியாக மோதிக்கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘அரசு விருந்தினர் மாளிகையில் நின்றவர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவேதான் அவர்களை அங்கிருந்து வெளியே செல்லுமாறு காவல்துறை மூலம் கூறினோம். ஆனால் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் என்று கூறுவது தவறு. குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஒற்றுமையாக உள்ளனர்’ என்றார்.