எம்.ஜி.ஆர். வீட்டில் பனை விதைகளை விதைத்த திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பனைவிதைகளை விதைக்க தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.

Update: 2018-10-06 22:15 GMT
சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பனைவிதைகளை விதைக்க தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் பல லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஆகஸ்டு 17-க்குள் ஒரு கோடி பனை விதைகளை ஊன்ற வேண்டும் என்ற இலக்கை திருமாவளவன் தீர்மானித்திருகிறார்.

தமிழகம் தழுவிய அளவில் பனைவிதைகளை ஊன்றி வரும் திருமா வளவன், சென்னை ராமா வரத்தில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் வீட்டு தோட்டத்தில் 56 பனை விதைகளை ஊன்றினார். மேலும், எம்.ஜி.ஆர். வீட்டு வளாகத்தில் செயல்படும் கண்பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவிகளை திருமாவளவன் வழங்கினார்.

முன்னதாக, எம்.ஜி.ஆரின் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருமாவளவனின் 30 ஆண்டு கால பொதுவாழ்வில் முதல் முறையாக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்