பலத்த மழை எச்சரிக்கை: தயார் நிலையில் 29 நிவாரண முகாம்கள் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்

பலத்த மழை எச்சரிக்கையை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 29 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் இருப்பதாக அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-06 22:30 GMT
அரியலூர்,

வடகிழக்கு பருவமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாவட்டத்தில் 29 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கக்கூடியவையாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளை கண்காணிக்க துணை கலெக்டர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டும், 29 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் 04329-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலக 04329-228709 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 4 தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் 24 மணிநேர அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் விவரம் வருமாறு:-

அரியலூர் கோட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண் 04329-222058, உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தொலைபேசி எண் 04331-245352, அரியலூர் தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 04329-222062, செந்துறை தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 04329-242320, ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 04331-250102, ஆண்டிமடம் தாசில்தார் அலுவலக தொலைபேசி எண் 04331-242500 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தகவல்களை தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்