ஹெல்மெட் அணியாததால் அபராதம்: போலீசாரை கண்டித்து இலங்கை அகதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற இலங்கை அகதிக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதை கண்டித்து அவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் தலைமையில், போக்குவரத்து போலீசார் நேற்று காலையில் பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பஸ் நிலையத்தில் இருந்து ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தார். இதனைக்கண்ட போலீசார் அவரை வழிமறித்து விசாரித்தனர்.
இதில் அவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்த சதீஷ் என்ற சூர்யகுமார் (வயது 32) என்பதும், புதிய பஸ் நிலையத்தில் மாலை நேரங்களில் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீசிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களையும், ஓட்டுனர் உரிமத்தையும் கேட்டனர். அதற்கு அவர் வீட்டில் உள்ளதாகவும், அதனை எடுத்து வருவதாக போலீசாரிடம் தெரிவித்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து வீட்டில் இருந்து சதீஷ் மோட்டார் சைக்கிளின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தார். அதனை போலீசார் வாங்கி பார்த்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளுக்கான இன்சூரன்ஸ் முடிந்து இருந்ததும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், தற்காலிக ஓட்டுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், சதீஷ் மீது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக அபராதம் விதிக்க முயன்றார்.
அப்போது, இலங்கை அகதியான தனக்கு ஓட்டுனர் உரிமம் கிடைப்பது அரிது. எனவே தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று போலீசாரிடம் சதீஷ் கெஞ்சினார். இதனால் போலீசாருக்கும், சதீசுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அபராதம் கட்டவில்லையென்றால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விடுவோம் என்று சதீசை போலீசார் எச்சரித்தனர்.
அப்போது சதீஷ், அபராதம் விதித்தால் வீட்டில் இருந்து மண்எண்ணெய் எடுத்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக போலீசாரிடம் தெரிவித்தார். ஆனாலும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக சதீசுக்கு அபராதம் விதித்தனர். இதனால் மனமுடைந்த சதீஷ் வீட்டிற்கு சென்று மண்எண்ணெய் கேனை கையில் எடுத்துக்கொண்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கடை முன்பு வந்தார். அப்போது அபராதம் விதித்த போலீசாரை கண்டித்து சதீஷ், தீக்குளிப்பதற்காக தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் மற்றும் போலீசார் ஓடிச்சென்று, சதீசிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், அங்கு பொதுமக்கள் கூடினர். இதையடுத்து போலீசார் பொதுமக்கள் கூட்டத்தை கலைத்து விட்டு, சதீசை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சதீசுக்கு திருமணமாகி புவனேஷ்வரி என்கிற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அகதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.